#BREAKING NEWS பிரதமருக்கு கொரோனா தொற்று! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
சீனாவை தாயகமாக கொண்ட இந்த கொரோனா தொற்று பல நாடுகளுக்கு சுற்றுலா செல்வது போல அனைத்து நாடுகளுக்கும் சென்று தொற்றை பரப்பியது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கானோர் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அனைத்து நாட்டினரும் மக்களின் நலன் கருதி ஊரடங்கை அமல்படுத்தினர். ஓராண்டு காலமாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்த நிலையில், புத்தாண்டில் இருந்து தொற்றின் தாக்கம் குறைய ஆரம்பித்தால் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் மெல்ல வெளியே செல்ல ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து மக்கள் கொரோனாவை மறந்து விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததால் மீண்டும் கொரோனா அதிக அளவு பரவ ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டுள்ளார். மேலும் இந்த தகவலை பிரதமரின் சிறப்பு பதிவாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இம்ரான் சில நாட்களுக்கு முன்பு தான் சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டர். அப்படி தடுப்பூசியை செலுத்தியும் அவருக்கு கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் அனைவரையும் பீதியடைய செய்துள்ளது .கொரொனோ தொற்றானது வரும் காலக்கட்டங்களில் அதிக அளவு பரவி வருகிறது.
தற்போது பிரான்சில் கொரொனோ தொற்று அதிகரித்துள்ளது.மீண்டும் அங்கு ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. அதே போல பல நாடுகளில் கொரொனோ தொற்று அதிகரித்தே வருகிறது.மக்கள் அனைவரும் அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இல்லையென்றால் மீண்டும் நாம் பல உயிர்களை இழக்க நேரிடும். அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் சிறிதளவு விதிமுறை கட்டுபாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.