BREAKING: ஊரடங்கு கிடையாது! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!
கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்து தற்போது வரை சிரிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்.ஆனால் மக்கள் கொரோனாவை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.சென்ற ஆண்டை விட தற்போது கொரோனா 2வது அலை உருவாகி அதிக அளவு தொற்றை பரப்பி வருகிறது.அந்தவககையில் நாடு முழுவது கொரோனா பரவல் காரணமாக 12 மற்றும் 10 சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
அதற்கடுத்து கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தினால் மகராஷ்டிராவில் முழு ஊரடங்கு 15 நாட்களுக்கு போடப்பட்டுள்ளது.அதற்கடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் வார இறுதி நாட்களான விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு போட்டுள்ளார்.இம்மாநிலத்தில் இரு நாட்கள் ஊரடங்கு போடப்பட்டதால் பல மாநிலங்களில் ஊரடங்கு போடப்படும் என வதந்திகள் பரவிய நிலையில் உள்ளது.அந்தவகையில் அரியானாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு இல்லை என அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.கொரோனா அதிகம் காணப்படும் மாநிலங்களில் மட்டுமே ஊரடங்கு போடப்படும் என கூறியுள்ளனர்.