#BREAKING விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டி! மாற்று கட்சிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கொடுத்த அதிர்ச்சி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதாக அறிவிப்பு.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கான வேலைகளை ஆரம்பித்தன.
அந்த வகையில் மக்களவை தேர்தலில் அமைந்த அதே நான்கு முனை போட்டி இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அமையும் சூழல் உருவானது. அந்த வகையில் திமுக,அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் தேர்வு சுமூகமாக நடந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவானது.
இந்நிலையில் இது சம்பந்தமாக பாமக தலைமையில் நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வில் தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று எதிர்பார்த்திருந்த மாற்று கட்சிகளுக்கு அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.