Breaking: திமுக எம்.பி மீதான சொத்து அபகரிப்பு வழக்குகள் ரத்து! சிபிசிஐடி க்கு செக்மெட் வைத்த நீதிமன்றம்!
1995ஆம் ஆண்டு திமுக எம் பி ஜெகத்ரட்சகன் குரோம்பேட்டையில், குரோம் லெதர் ஃபேக்டரி ஒன்றை வாங்கினார். அவ்வாறு வாங்கியவர் 1.5 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக 41 பேருக்கு பிரித்துக் கொடுத்ததாக புகார் வந்தது. இந்த புகாரை குவிட்டன்தாசன் என்பவர் பொதுநல வழக்காக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் மனுவை ஏற்று இவ்வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அவ்வாறு விசாரனை நடத்தியதில் 2013 ஆம் ஆண்டு குவிட்டன்தாசன் தொடுத்த வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும் காவல்துறையினரும் விசாரணை நடத்தி அதனை முடித்து வைத்தனர். அதனையடுத்து சிபிசிஐடி மீண்டும் நில அபகரிப்பு குறித்து வழக்கு பதிவு செய்தது. மீண்டும் வழக்கு விசாரணையை ஆரம்பித்தது. இந்நிலையில் நீதிமன்றம் முடித்து வைத்த வழக்கை மீண்டும் சிபிசிஐடி விசாரித்து வருவதை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியும் ,விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். எம் பி யின் மனுவை ஏற்று, உயர்நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பானது இன்று வழங்கப்பட்டது. அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு வழக்குகள் குறித்து விசாரணைகள் முடிவுற்ற நிலையில், மீண்டும் சிபிசிஐடி விசாரணை செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்ற திமுக எம்.பி மனுவை ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.