சட்டசபையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்! மகிழ்ச்சியின் தமிழக மக்கள்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கின்ற 16.43 லட்சம் விவசாயிகளுடைய ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருப்பதாக தெரிகிறது.

சென்னையை அடுத்து இருக்கின்ற கும்மிடிப்பூண்டி பஞ்செட்டி அருகில் இருக்கின்ற நத்தம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அந்த சமயத்தில் அவர் உரையாடிய பொழுது எதிர்வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்ததும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் நாடாளுமன்றத்தேர்தலில் வாக்குறுதி கொடுத்தபடி கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு தரப்படும் என்று சொல்லி இருந்தார்.

இதுபோன்ற ஒரு சூழலில், தமிழக சட்டசபையில் ஒரு அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருக்கின்ற 16.43 லட்சம் விவசாயிகளுடைய 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் விவசாயக் கடன் அனைத்தையும் தமிழக அரசு தள்ளுபடி செய்கிறது என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருக்கிறார். அவருடைய இந்த அறிவிப்பு காரணமாக, தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

இது குறித்து கருத்து சொன்ன அதிமுகவைச் சேர்ந்த மிக மூத்த நிர்வாகி ஒருவர், திமுக ஒரு வாக்குறுதியை கொடுக்கும் ஆனால் அதனை நிறைவேற்றாது, அதிமுக வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காவிட்டாலும் மக்களுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வரும். அதில் ஒன்றுதான் இந்த கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறது அரசு என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது என்று தெரிவித்தார்.