Breaking: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!! அரசு திடீர் உத்தரவு!!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற த் தேர்தல் ஆனது இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற போவதை அடுத்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியின் மீது தொடர்ந்து புகார் சுமத்தி வரும் நிலையிலும், பிற கட்சிகள் சாதிவாரியாக ஓட்டுகளை கவர அவதூறு பேச்சுகள் என சட்டமன்ற தேர்தலை விட இந்த ஈரோடு இடைத்தேர்தலானது பல விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற போவதால் 27 ஆம் தேதி அங்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டதுடன் அரசு அலுவலகங்கள் பள்ளிகள் என அனைத்திற்கும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தற்பொழுது 25ஆம் தேதி மதுபான கடைகள் இயங்க கூடாது என தடை உத்தரவு வெளிவந்துள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூறுகையில், வரும் 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற போவதால் தமிழக அரசின் உத்தரவிற்கு இணங்க வரும் 25ம் தேதி காலை 10 மணி முதல் அதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் அதாவது 27 ஆம் தேதி வரை ஈரோட்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மதுபான கடைகள் நடத்த தடை விதித்துள்ளனர். இந்த தடையை மீறி மதுபான கடைகள் இயங்கி வந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.