Breaking: வாக்குபதிவு இடத்தில் திடீர் துப்பாக்கி சூடு!! பதற்றத்தில் பொதுமக்கள்!!

0
271
lok sabha election 2024
lok sabha election 2024

Breaking: வாக்குபதிவு இடத்தில் திடீர் துப்பாக்கி சூடு!! பதற்றத்தில் பொதுமக்கள்!!

நாடாளுமன்ற தேர்தலானது வரும் ஜூன் மாதம் முதல் வரை நடக்க உள்ளது.அந்தவகையில் இது 7 கட்டமாக நடைபெற இருப்பதால் அனைத்து தொகுதிகளிலும் தீவீர வாக்கு சேகரிப்பில் கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளனர்.அந்தவகையில் இன்று முதற்கட்டமாக தமிழ்நாடு எனத் தொடங்கி மணிப்பூர் என 21 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மேலும் 102 யூனியன் பிரதேசங்களிலும் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

ஒவ்வொரு முறை தேர்தலிலும் ஏதேனும் தொகுதியில் கலவரம் நடப்பது இயல்பான ஒன்று.அந்தவகையில் தமிழகத்தில் வேங்கைவயல் என்ற கிராம மக்கள் தங்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாததால் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் பல சர்ச்சைகள் நடந்தவாறு தான் உள்ளது.அந்தவகையில் கடந்த வருடம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி  சமூகத்தினரிடைய நடைபெற்ற மோதலானது நாட்டையே உலுக்கியது.

ஏனென்றால் குக்கி பழங்குடி பெண்கள் இருவரை நிர்வாணமாக மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்கள் வீதி தோறும் நடக்க வைத்து சென்றுள்ளனர்.அதுமட்டுமின்றி பாலியல் தொல்லைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.இதனால் நாடெங்கும் கலவரம் வெடிக்க ஆரம்பித்து.இதற்கு பாஜக தான் முக்கிய காரணம் என்றும் பலர் கூறி வந்தனர்.அதுபோலவே இந்த சம்பவம் குறித்து தற்பொழுது வரை பெருமளவில் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இன்று அங்கும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு தொடங்கியுள்ளது.முதற்கட்டமாக மொய்ராங் பகுதியில் வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.ஆனால் இது எதற்காக நடந்து என்பது குறித்து எந்தொரு தகவலும் தற்பொழுது வரை வெளிவரவில்லை.மேற்கொண்டு போலீசார் விசாரணை செய்தும் வருகின்றனர்.இந்த துப்பாக்கி சூட்டினால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.மேற்கொண்டு வாக்குபதிவும் நடந்த வண்ணமாக தான் உள்ளது.

Previous articleகோவையில் காவல்துறையினருடன் மோதல்.. குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட திமுக பகுதி செயலாளர்!!
Next articleஎந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!!