Breaking: நன்கொடைகளுக்கு வரி விதிப்பது சரியே! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
சில கல்வி நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் மாணவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து வருகிறது. ஆனால் இது மாணவர்களின் படிப்பிற்கு என்று வசூல் செய்கின்றனர். ஆனால் அந்த தொகை மாணவர்களுக்கு சென்றடைகிறதா என்பது தெரியவில்லை. இவ்வாறு பல கல்வி நிறுவனங்கள் நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிப்பதை தடுக்க உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
இதற்கு அடுத்தப்படியாக இனி நன்கொடை என்ற பெயரில் வசூல் செய்யும் பணத்திற்கு வரி கட்டும் படி வருமானவரித்துறையினர் கூறியிருந்தனர். ஆனால் இவ்வாறு வரி விதித்ததை ரத்து செய்யுமாறு வழக்கு போடப்பட்டு அதனை ரத்தும் செய்தனர்.இருப்பினும்,வருமானவரித்துறையினர் ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மீண்டும் வழக்கு தொடுத்து இருந்தனர். இந்த வழக்கில் நீதிபதி கூறியதாவது, கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிப்பது சட்டப்படி குற்றம்.
இருப்பினும் அவ்வாறு வசூல் செய்யும் பணத்திற்கு வரி வசூல் செய்வது சரிதான்.ஏனென்றால் இதன் மூலம் நன்கொடை வசூல் செய்வதை தடுக்க முடியும். அதுமட்டுமின்றி தற்பொழுது எந்தெந்த கல்வி நிறுவனங்கள் இவ்வாறு நன்கொடை என்ற பெயரில் பணத்தை வசூல் செய்து வருகின்றனர் என்பதை சமர்ப்பிக்கும் வகையில் இணையதளத்தை உருவாக்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.