BREAKING:ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம்! பள்ளியில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்க தடை!

BREAKING:ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம்! பள்ளியில் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்க தடை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் உள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ மாணவி உயிரிழந்த சம்பவம் கலவரமாக வெடித்தது.அப்போது அந்த பள்ளியானது சூறையாடபட்டது,மாணவர்களின் ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமானது.அதனையடுத்து பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தபட்டது.பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என  பள்ளி நிர்வாக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது அந்த விசாரணையில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை உள்ள வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளியை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் ஒரு மாத காலத்தில் ஏற்படும் சூழல்களை கருத்தில் கொண்டு தான் அடுத்த கட்டமாக முழுமையாக பள்ளியை திறக்க அனுமதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த வழக்கானது இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மேலும் பள்ளியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளியில் நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றது.இந்நிலையில் எந்த ஒரு பிரச்சனைகளும் ஏற்படவில்லை எனவும் மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருவதால் அது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என கூறினார்.

அதனால் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை பள்ளிக்கு நேரடி வகுப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும் என வாதிட்டார்.மேலும் அரசு தரப்பிலும் வழக்கறிஞர் வாதிட்டார்.இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி பத்தாம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.மேலும் மாணவர்களுக்கு மனதில் நம்பிக்கை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளி நிர்வாகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment