BREAKING: அந்தரத்தில் தொங்கும் இவர்களது பதவி! ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
திமுக பத்தாண்டுகள் கழித்து தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதனால் நல்லாட்சி அமைய வேண்டும் என்று பல திட்டங்களை அமல் படுத்தி வருகின்றனர். மேலும் மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் கேட்டு நிறைவேற்றியும் வருகின்றனர். அதேபோல முன்னாள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் திமுக ஆட்சியின் புகழாரம் சுற்றியும் பாடி வருகிறது. அதைப்போல முதல்வர் பல்வேறு இடங்களில் அனைத்து துறைகளும் முறைப்படி இயங்குகிறதா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.அந்த வகைகள் தலைமை செயலகத்தில் மக்கள் மனு கொடுக்கும் இடத்திற்கு சென்று நேரடியாக அனைவரின் குறைகளை கேட்டறிந்தார்.
அதேபோல் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தனது தொகுதியில் திடீர் ஆய்வு செய்து அங்கு தேவையான வற்றை நிறைவேற்றி வருகின்றார். அந்த வகையில் கண்ணகி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனையடுத்து திடீரென்று அங்கு நின்று கொண்டிருந்த மாநகரப் பேருந்தில் ஏறி அங்குள்ள மக்களிடம் மக்களாக கலந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அந்தப் பேருந்தில் இருந்த பெண் பயணிகளிடம் கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை குறித்தும் கேட்டறிந்தார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருவதால் எந்த துறையில் உள்ளவர்கள் சரியான முறையில் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருக்கின்றனர் என்பதை கண்டறிந்து வருகிறார். மேலும் அமைச்சர்கள் எந்த வித நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவரவர் துறைகளில் சரியான முறையில் பணியாற்ற அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் எச்சரித்து வருகிறாராம்.
அவ்வாறு முதல்வர் எச்சரித்தும் சில துறைகளில் மட்டுமே முன்பைவிட சிறப்பாக செயல்படுகின்றனர்.இருப்பினும் சில துறைகளை எச்சரித்தும் அவர்கள் ஏதும் கண்டு கொள்ளவில்லை.அதனால் பணியில் முழுமையாக ஈடுபடாத நபர்களை கண்டு முதல்வர் ஓர் பட்டியலை உருவாக்கி உள்ளாராம். இத்தகவலை பெரும் பரபரப்பாக அரசியல் சுற்று வட்டாரங்கள் தற்பொழுது பேசி வருகின்றனர். இந்தி பட்டியலில் உள்ளவர்கள் மேல் முதல்வர் தீவிர நடவடிக்கை எடுக்க போகிறார் என்று கூறுகின்றனர். இந்த பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளது என்பதை அறிந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர் என்று அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.