#BREAKING இவர்கள் தான் நாளைய அமைச்சர்கள்! மாற்றத்திற்கு முரணாக நடந்ததா?
சட்டமன்ற தேர்தல் ஆனது சென்ற மாதம் முடிவடைந்தது.இந்நிலையில் மக்கள் அனைவரும் முடிவுகளை எண்ணி காத்துக்கொண்டிருந்தனர்.மக்கள் எதிர் பார்த்த அந்நாள் (மே 2-)வந்தது.வாக்கு எண்ணிக்கை ஆரபித்த தொடக்கத்திலிருந்தே திமுக முன்னிலை வகித்து வெற்றி பாதையை நோக்கி சென்றது.அந்தவகையில் திமுக கூட்டணி கட்சிகளுடன் 159 இடங்களில் வெற்றி பெற்றது.
அதே அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்று பின் தங்கியது.இந்நிலையில் மே 7- ம் தேதி வெள்ளிக்கிழமை திமுக தலைவர் முதன்முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.இவர் பதவி ஏற்கும் முன் பல வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்களின் பெயரை அமைச்சர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளும்படி திமுக பொருளாளர் துரைமுருகனிடம் சிபாரிசு செய்தனர்.ஆனால் துரைமுருகனோ,வேட்பாளர்கள் பட்டியலையே தலைவர் ஸ்டாலின் ரகசியமாக வைத்து,அவரே வெளியிட்டார்.அதுபோல இந்த அமைச்சர் பட்டியலையும் அவர் ரகசியமாக வைத்துள்ளார்.அவரே வெளியிடுவார் என கூறினார்.நாளை திமுக தலைவர் பதவியேற்கும் நிலையில் இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
நாளை முதல்வர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பதவி ஏற்க உள்ளார்கள்.அந்த 30க்கும் மேற்பட்டோருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித்,அவர்களுக்கு பதவி பிரமாணமும் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் கொடுக்க உள்ளார்.
துரைமுருகன்: நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை
கே.என்.நேரு: நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்
ஐ பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்
பொன்முடி: உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல்
ஏ.வ.வேலு: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் – வேளாண்துறை அமைச்சர்
கே.கே.எஸ்.எஸ்..ஆர்.ராமச்சந்திரன் – வருவாய்த்துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர்
ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்
முத்துசாமி – வீட்டு வசதித்துறை அமைச்சர்
பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
தா.மோ.அன்பரசன் – ஊரக தொழில்துறை அமைச்சர்
எம்.பி சாமிநாதன் – செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
கீதா ஜீவன் – சமூக நலத்துறை அமைச்சர்
அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளத்துறை அமைச்சர்
ராஜகண்ணப்பன் – போக்குவரத்து துறை அமைச்சர்
கே.ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்
சக்கரபாணி – உணவுத்துறை அமைச்சர்
வி.செந்தில் பாலாஜி – மின்சாரத்துறை அமைச்சர்
ஆர்.காந்தி – கைத்தறித்துறை அமைச்சர்
மா.சுப்ரமணியன் – சுகாதாரத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி – வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர்
எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்
பி.கே.சேகர் பாபு – இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
பழனிவேல் தியாகராஜன் – நிதி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்
சா.மு.நாசர் – பால் வளத்துறை அமைச்சர்
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
சிவ.வீ.மெய்யநாதன் – சுற்றுச்சூழல், விளையாட்டுத் துறை அமைச்சர்
சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்
கயல்விழி செல்வராஜ் – ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்
இதில் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கும் அமைச்சர் பதவி கிடைப்பதாக கூறி வந்தனர்.ஆனால் அவ்வாறு எவ்வித பதவியையும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.