நம்பிக்கை வாக்கெடுப்பு நாராயணசாமி எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் காங்கிரஸ் உறுப்பினர்கள்!

Photo of author

By Sakthi

புதுச்சேரி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியிலிருந்து நாராயணசாமி ராஜினாமா செய்திருக்கிறார்.

தன்னுடைய ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இடம் நாராயணசாமி கொடுத்துவிட்டார். பெரும்பான்மை இருக்கிறது என்பதை சபாநாயகர் ஏற்காததால் ராஜினாமா செய்வதாக நாராயணசாமி விளக்கம் கொடுத்திருக்கிறார். நியமன சட்டசபை உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கக்கூடாது என்ற எங்களுடைய கோரிக்கையை சபாநாயகர் ஏற்காத காரணத்தால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்றும் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

புதுவை மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்து சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இதில் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என்று சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டார். இதன் காரணமாக நாராயணசாமி தலைமையிலான புதுவை காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.