#Breakingnews:! இறுதி செமஸ்டர் தேர்வு தேதியை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்! தேர்வு எவ்வாறு நடத்தப்படும் முழு விளக்கம்!

Photo of author

By Pavithra

#Breakingnews:! இறுதி செமஸ்டர் தேர்வு தேதியை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்! தேர்வு எவ்வாறு நடத்தப்படும் முழு விளக்கம்!

பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) வழிகாட்டுதல்படி தேர்வுகளை நடத்த,கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.மேலும் இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும்,தேர்வுகள் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் மாதிரி தேர்வு(model exams)நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
மேலும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படுவதால்,கணினி (கேமராவுடன்),லேப்டாப், மைக்ரோபோன் வசதியுடன்,இணைய வசதி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.