பாஜாகவுடனான கூட்டணி முறிவு.. காலக்கெடு கொடுத்த எடப்பாடி!! மேலிடத்திற்கு எகிறும் பிரஷர்!!
இன்று காலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது தொடங்கிய நிலையில்,இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்த கூட்டத்தில், வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் யுத்திகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஊழல் செய்தார் என்பதை பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை கூறியது குறித்தும் விவாதித்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசியதற்கு பாஜக உடனான கூட்டணி கட்டாயம் தகர்க்கப்படும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.அது மட்டுமின்றி இவ்வாறு அண்ணாமலை கூறியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை எடப்பாடி அவர்கள் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது, தற்பொழுது நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த முதல்வர் மற்றும் எங்கள் தலைவியுமான ஜெயலலிதா அவர்களைபற்றி அண்ணாமலை கூறியதற்கு பாஜக மேலிடம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜக உடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் எனக் தெரிவித்துள்ளார்.ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.மேற்கொண்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் அவர்கள் அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்றும் ஆளுமை மிக்க எங்கள் தலைவி பற்றி இவ்வாறு பேசுவதற்கு எந்த ஒரு தகுதியும் அவருக்கு இல்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.