தாய்ப்பால் கட்டி கொள்கிறதா? முட்டைகோஸ் இலையை 20 நிமிடம் மார்பகங்களில் இப்படி வையுங்கள்! 

Photo of author

By Selvarani

தாய்ப்பால் கட்டி கொள்கிறதா? முட்டைகோஸ் இலையை 20 நிமிடம் மார்பகங்களில் இப்படி வையுங்கள்!

தாய்ப்பால் குழந்தைகளுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்தை கொடுக்கும் ஆனால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உடல் ரீதியான பல அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்றால் பால் கட்டிக் கொள்வது, மார்பக வலி, வீக்கம், சோர்வாக உணர்வது மட்டுமல்லாமல் மனக் கவலையுடன் செயல்படுவார்கள்.

பால் சுரப்பை குறைக்க நம் முன்னோர்கள் சொன்னதை கடைபிடிக்கும் வழியில் பெண்கள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தி வரும் முட்டைகோஸ் இலையை மார்பக வலிக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இதன் குளிர்ச்சியான தன்மை விரிவடைந்த மார்பகத்தை ஓரளவுக்கு சுருங்கவும், தாய்ப்பால் சுரப்பை குறைக்கவும் உதவுகிறது.

முட்டைகோஸ் இலைகளை தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அடுத்து, இலைகளை உங்கள் மார்பகம் மீது வைக்கவும். மார்பக சருமத்தின் மீது இலைகள் இருப்பது போல வைக்க வேண்டும். வலி, வீக்கம், போன்றவற்றுக்காக பயன்படுத்தினால், 20 நிமிடம் வரை வைத்தால் போதும் பிரச்சனை தீரும்.

இதை மீண்டும், மீண்டும் தொடர்ச்சியாக செய்து வந்தால், மார்பகம் வீங்குதல், மார்பக பகுதியில் வலி, குழந்தைகளுக்கு பாலூட்டும் போது மார்பகங்கள் அசௌகரியமாக உணர்தல் போன்றவை சரியாகும். உங்கள் மார்பகள் நலத்துடன் அல்லது நன்கு இருப்பது போன்று உணரும் பட்சத்தில் இதை நீங்கள் நிறுத்திவிட வேண்டும்.