போலீசாருக்கு கட்டு கட்டாக லஞ்சம்! வசமாக மாட்டிய திமுக!

0
78
Bribes to the police! DMK comfortable!
Bribes to the police! DMK comfortable!

போலீசாருக்கு கட்டு கட்டாக லஞ்சம்! வசமாக மாட்டிய திமுக!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு திவீர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது பல இடங்களில் ஓட்டுக்காக பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.இதனால் தேர்தல் ஆணையம் பல பறக்கும் படையின் பல குழுக்களை நியமித்துள்ளது.

அவ்வாறு நியமித்தும் அவர்கள் கண்ணுக்கு விபூதி பூசிவிட்டு சில இடங்களில் பணம் பட்டுவாடா நடந்து வருவது சகஜமாகிவிட்டது.அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்  புதுக்கோட்டை கலெக்ட்டர் அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லை தட்டுவது இல்லையாம் என அந்த ஊர் மக்கள் பேசி வருகின்றனர்.ஏனென்றால் அவருக்கு புதுக்கோட்டையில் கலெக்டர் போஸ்டிங் கொடுத்ததே அவர் தான் என பலரும் பேசுகின்றனர்.

புதுக்கோட்டையில் எந்த வித லஞ்ச ஊழல் நடந்தாலும் அதற்கு துணையாக ஐபிஎஸ் மற்றும் ஐஎஎஸ் உடந்தையாக உள்ளனர் என பலர் பேசுகின்றனர்.இரு நாட்களுக்கு முன் அதிமுக வேட்பாளர் மகனின் காரில் லட்சகணக்கில் பணத்தை காவலர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.அந்த பணம் காரினுள் இல்லை காரின் அடியிலிருந்தது என வழக்கை மாற்றி போட்டனர்.அதுமட்டுமின்றி சேலம் அருகே கோடிகணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது அப்போதும் அதிமுக வின் முக்கிய புள்ளி மாட்டினார்.

அதையும் இந்த தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கம் கண்டுக்கொள்ளவில்லை.அதனைத்தொடர்ந்து தற்போது திருச்சியி மேற்கு தொகுதியில் போலீஸ் காவலர்கள் பதவிக்கேற்ப பணம் விநியோகம் நடந்துள்ளது.இந்த தகவலை அறிந்த தேர்தல் ஆணையம் அப்பகுதியில் கண்காணிப்பு நடத்தியது.ஆணையர் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணக்கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் குறிப்பாக திருச்சி காவல் நிலையம்,உரையூர் காவல் நிலையம்,கண்டோன்மென்ட் காவல் நிலையம் போன்றவற்றில் பணத்துடன் கூடிய கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதுத் தொடர்பாக மாநகர காவல் குற்றப்பிரிவினர் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.அதில் 2 காவல் எழுத்தாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பணத்தை வழங்கியது திமுக வேட்பாளர் கே.என்.நேரு என குற்றம் சாட்டியுள்ளனர்.ஆனால் அவர் தன் பேருக்கு களங்கம் வரவே இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு க்கு கடிதம் எழுதியுள்ளார்.இவ்வாறு இரு கட்சிகளிடமிருந்து இந்த முறை தேர்தலில் அதிக அளவு பணங்களை இறக்கியுள்ளனர் என அனைவரும் பேசி வருகின்றனர்.