மணமேடையில் போதையில் ரகளையில் ஈடுப்பட்ட மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

Photo of author

By Janani

மணமேடையில் போதையில் ரகளையில் ஈடுப்பட்ட மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

Janani

மணமகன் போதையில் வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு மேலகோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், உறவினர்கள் நண்பர்கள் என பலர் வருகை தந்திருந்தனர்.

அப்போது, மேடையில் இருந்த மணமகன் மதுபோதையில் மணமகள் மற்றும் அவரது வீட்டாரிடம் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனால், இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மணமகன் மன்னிப்பு கேட்டார். ஆனால், சமாதானம் அடையாத மணமகள் திருமணத்தை நிறுத்தியதோடு கல்யாண செலவையும், நகைகளையும் திரும்ப கேட்டுள்ளார். மீண்டும் அங்கு கலாட்டா ஏற்பட்டதால் மணமகனை பாதுகாப்பா காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினர். மணமகன் மதுபோதையில் செய்த கலாட்டாவில் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.