பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Photo of author

By CineDesk

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பிரிட்டனில் தேர்தல் நடைபெற்று புதிய பிரதமரை தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரக்சிட் விவகாரம் இந்த தேர்தலில் பெரும் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி உள்பட மொத்தம் ஏழு கட்சிகள் போட்டியிட்டாலும், ம் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று காலை 7 மணிக்கு இங்கிலாந்து நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் 650 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் இன்றைய வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஒரு சில மணிநேரங்களிலேயே வாக்குகள் எண்ணப்படும் என்றும் அனேகமாக நாளை அதிகாலைக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்றும் அடுத்த பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் வெற்றி பெற்ற கட்சி இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை ஆகும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரியவந்து உள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வைரலானதால் முடிவுகளில் திருப்பம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.