மீண்டும் பிரிட்டன் பிரதமர் ஆகிறாரா போரீஸ் ஜான்சன்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள்!
பிரிட்டனில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 650 தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் வெற்றி பெறும் கட்சி எது என்றும் அடுத்த பிரதமர் யார் என்பதையும் என்ற செய்தியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு 650 எம்பிக்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் மெஜாரிட்டி பெற 326 எம்பிக்கள் ஒரு கட்சிக்க்கு தேவை. இந்த நிலையில் பிபிசி மற்றும் ஸ்கை தொலைக்காட்சிகள் எடுத்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேட்டிவ் கட்சி மிக அபாரமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கருத்துக் கணிப்பின்படி கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 368 தொகுதிகள் கிடைக்கும் என்றும் தொழிலாளர் கட்சிக்கு 196 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மற்ற கட்சிகளுக்கு 80 முதல் 100 தொகுதிகள் வரை கிடைக்கும் என அந்த கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் சுமார் நூற்று நாற்பத்து நான்கு தொகுதிகளில் இந்த கருத்துகணிப்பு எடுக்கப்பட்டதாகவும் இந்த கருத்துக் கணிப்பின் படி தான் தேர்தலின் முடிவு வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இன்னும் சில மணி நேரத்தில் அதிகாரபூர்வமான தேர்தல் முடிவுகள் வெளிவரும் என்பதால் அதுவரை பொறுமை காப்போம்.