அண்ணன் நான் இறங்கி வரவா..! 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த லியோ பாடல்!

Photo of author

By Divya

அண்ணன் நான் இறங்கி வரவா..! 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த லியோ பாடல்!

Divya

அண்ணன் நான் இறங்கி வரவா..! 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த லியோ பாடல்!

 

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் விஜய்.இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள படம் லியோ.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.மேலும் சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் வரும் ‘நான் ரெடி’ என்ற பாடலை விஷ்ணு எடவன் எழுதி,விஜய் பாடியுள்ளார்.

கடந்த ஜூன்-22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இப்பாடலை லியோ படக்குழு வெளியிட்டிருந்தது.மேலும் வெளியான முதல் நாளே இணையத்தில் நம்பர்-01 இடத்தை பிடித்திருந்தது.மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவாக பதிவிட்டு ட்ரெண்டாக்கி வந்தனர்.இதனை தொடர்ந்து ஒரே மாதத்தில் 87 மில்லியன் பார்வையார்களை இப்பாடல் கடந்தது.மேலும் இப்பாடலில் மது மற்றும் புகை பிடிப்பதை ஆதரிக்கும் விதமாக சில வரிகள் இடம் பெற்றுள்ளன என்று பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில் தற்பொழுது இந்த ‘நான் ரெடி’ பாடல் யூடியூப் வலைத்தள பக்கத்தில் 100 மில்லியன் அதாவது 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.மேலும் இதனை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் பேஸ்புக்,இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் பக்கத்தில் #NaaReady100Million என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி அவற்றை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 

மேலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் அவர்களின் இந்த லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.