திரைப்படமாகும் புரூஸ் லீ வாழ்க்கை…

0
229

லைப் ஆப் பை என்ற படத்தை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ, புரூஸ் லீ வாழ்க்கை கதையை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குங்பூ தற்காப்பு கலையில் ஜாம்பவானாக உலகம் முழுவதும் பிரபலமான புரூஸ் லீயின் வாழ்க்கையை மையமாக வைத்து ஏற்கனவே சில படங்களும், ஆவணப்படங்களும் வந்துள்ளன.

அந்த வரிசையில் புரூஸ் லீ வாழ்க்கையை வைத்து இன்னொரு படமும் தயாராக உள்ளது. இந்தப்படத்தை லைப் ஆப் பை என்ற படத்தை இயக்கி பிரபலமான ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ இயக்க உள்ளார்.

புரூஸ் லீ வேடத்தில் மகன் மேசன் நடிக்க உள்ளதாகவும், 32 வயதில் இறந்த புரூஸ் லீயின் வீரம், சாகசங்கள், அவருக்கு எதிராக எதிரிகளின் சதித்திட்டம் உள்ளிட்ட அனைத்தும் படத்தில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ ஆஸ்கார் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளதால் இந்த படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

Previous articleஇந்தியா-வங்காளதேச அணிகள் இன்று மோதல்…
Next articleபோலீஸ் கான்ஸ்டபிளை பளார் என அறைந்த பாஜக நிர்வாகி! கட்டணம் தெரிவிக்கும் எதிர்க் கட்சிகள்!