BSNL: BSNL நிறுவனம் ESIM என்ற திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
BSNL நிறுவன இயக்குனர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றிய வெளியிட்டு இருக்கிறார். அப் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது, பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் நடைபெற்ற AskBSNL நிகழ்வின் போது தமிழகத்திற்கு எப்போது ESIM பயன்பாடு வரும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலாக BSNL நிறுவன இயக்குனர் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ESIM தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வரும் என பதில் அளித்து இருந்தார்.
ESIM என்பது தற்போது நாம் பயன்படுத்தி வரும் சிம் கார்டை போல் இல்லாமல் தனியாக எடுக்க முடியாது அது போனின் மதர் போர்ட் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். அந்த போனில் உள்ள இ சிம்மை சில நிமிடங்களில் அக்டேவ்ட் செய்ய முடியும், மேலும், சிம் கார்டை குளோனிங் செய்வது சிம் திருட்டு போன்ற குற்றங்களை இதன் மூலம் தடுக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம் ஆகும்.
ஆனால், ஒரு போனில் உள்ள இ சிம் கார்டை மற்றொரு போனுக்கு மாற முடியாது. போன் தொலைந்து விட்டால் மீண்டும் அந்த இ சிம்மை பெற முடியாது. தோற்பது உள்ள தோளைத் தொடர்புநிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் போன்றவை ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்ததை தொடர்ந்து வருவதால் பலரும் இன்று குறைவான கட்டணம் வாங்கும் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்க்கு(BSNL) சிம் கார்ட் வாங்கி உபயோகித்து வருகிறார்கள்.
இந்த நிறுவனம் 1 லட்சம் 4G டவர்களை நாடுமுழுவது நிறுவ முடிவு செய்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 4 ,மாதங்களில் சுமார் 5.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் BSNL நிறுவனத்திற்கு மாறி இருக்கிறார்கள்.