BSNL-ன் அசரவைக்கும் ஆஃபர்கள்!!

Photo of author

By CineDesk

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெ ( பி.எஸ்.என்.எல்) தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.இதனால் 22 ஜிபி CUL
பிராட்பேண்ட் திட்டத்தில் ரூ.1,299 விலையுடன் வருகிறது.இது ஜூலை 1, 2020 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த பேக் ஒரு நாளைக்கு 22 ஜிபி டேட்டாவையும் 10 Mbps வேகத்தையும் வழங்குகிறது.

தினசரி வரம்பு முடிந்ததும், பயனர்கள் 2Mbps வேகத்தில் இணைய சேவையை அனுபவிக்க முடியும். இந்த பேக் மாதாந்திர மற்றும் வருடாந்திர அடிப்படையில் கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கு மாதந்தோறும், பயனர்கள் ரூ.1,299 பணம் செலுத்த வேண்டும். இருப்பினும், வருடாந்திர திட்டம் என்றால், பயனர்கள் ரூ.12,990 செலுத்த வேண்டும். இதனால் மாதாந்திர திட்டத்துடன் ஒப்பிடும்போது ரூ.2,595 சேமிக்கப்படுகிறது.

இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டு முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் விருப்பத்துடனும் கிடைக்கிறது. 2 ஆண்டு திட்டத்திற்கு ரூ.24,681 விலையும் மற்றும் 3 ஆண்டு திட்டத்திற்கு ரூ.36,372 விலையும் கொண்டுள்ளது. இந்த திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டம் தவிர அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் கிடைகும் என நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த திட்டம் ஒரு மின்னஞ்சல் முகவரி மற்றும் 1 ஜிபி கிளவுட் சேமிப்பகத்துடன் ஒரு இலவச கணக்கையும் வழங்குகிறது.

இதற்கிடையில், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை தக்க வைக்க இந்தியாவில் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு பல ரீசார்ஜ் விருப்பங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த சேவை ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்திலிருந்து ரூ.1,999 திட்டம் வரை செல்லும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம், தற்போதுள்ள திட்டம் காலாவதியான பிறகு பயனர்கள் தங்கள் ப்ரீபெய்ட் மொபைல் எண்ணுக்கு முன்கூட்டியே ரீசார்ஜ் செய்யலாம்.இந்த பட்டியலில் ரூ.97, ரூ.98, ரூ.118, ரூ.187, ரூ.247, ரூ.319, ரூ.399, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.699, ரூ.997, ரூ.1,699, மற்றும் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டங்கள் இதில் உள்ளடக்கியுள்ளன.