ராகுலின் எம்.பி அலுவலகத்தில் பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு!!

Photo of author

By Savitha

ராகுலின் எம்.பி அலுவலகத்தில் பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு!!

வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் எம்பி அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பு மற்றும் இணைய இணைப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் துண்டித்துள்ளது.

எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துண்டிப்பு நடவடிக்கைக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.

தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும், இதற்கிடையில் இதுபோன்ற முடிவுகள் ஜனநாயகத்திற்கு சவால் விடுவதாகவும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பதிலளித்துள்ளது.

இந்நிலையில் வரும் 11 தேதி ராகுல்காந்தி கேரளா வரவுள்ளார். இதற்கிடையில், ராகுல் காந்தி வயநாடு மக்களுக்காக எழுதிய கடிதத்தை தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கடிதத்தை வழங்கி வருகின்றனர்.

அனைத்து நெருக்கடிகளையும் ஒற்றுமையாக சமாளித்து முன்னேற வேண்டும் என்று ராகுல் காந்தி கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ராகுல் காந்தி வரும் 11ம் தேதி வயநாடு வருகிறார்.

வயநாட்டிற்கு வரும் ராகுலுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க கட்சி முடிவு செய்தது.