பி.எஸ்.என்.எல் யின் புதிய திட்டம்! ரூ.45 க்கு 45 நாட்கள் சலுகை!

Photo of author

By Rupa

பி.எஸ்.என்.எல் யின் புதிய திட்டம்! ரூ.45 க்கு 45 நாட்கள் சலுகை!

இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் மக்கள் அதிகளவு நெட் வர்க் கிடைக்கும் சிம்மையே உபயோகம் செய்ய நினைக்கின்றனர்.அந்தவகையில் ஜியோ,ஏர்டெல்,வோடாபோன் போன்றவை மக்களை கவர மாதம் தோறும் பல சலூகைகளை விடுகின்றனர்.அந்தவகையில் மக்கள் மாதம் தோறும் ஓர் சிம் கார்டிருந்து வேறொரு சிம் கார்டுக்கோ அல்லது புதிய சிம் களையோ வாங்கி உபயோகம் செய்தும் வருகின்றனர்.

இவற்றுடன் பல போட்டிகள் நடந்த வண்ணமகதான் உள்ளது.அந்தவகையில் இவர்களுக்கு நடுவில் தற்பொழுது பி.எஸ்,என்.எல் சிம்மும் போட்டி போட வந்துள்ளது.தற்போது பி.எஸ்,என்.எல் புதிய ஆப்பர் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் ரூ.45 ரூபாய்க்கு ரீசார்ஜ் கூப்பன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த ரீசார்ஜ் திட்டம் மூலம் 10ஜிபி டேட்டா,100 sms மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் என கூறியுள்ளது.இது அனைத்தும் 45 நாட்களுக்கு என்று தெரிவித்துள்ளனர்.இந்த ரீஜார்ஜ் கூப்பன் சிறிது நாட்களுக்கு மட்டுமே என்றும் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி 45நாட்கள் கழித்து இந்த திட்டம் முடிந்த பிறகு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.இதுமட்டுமின்றி ஜூலை 31 ம் தேதி வரை இலவச  பி.எஸ்,என்.எல் சிம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.அத்தோடு பிரீபெய்டுக்கும் நல்ல சலுகை ஒன்றை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.ரூ.249 க்கு ரீசார்ஜ் செய்து 60நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ்,தினமும் 2ஜிபி டேட்டா போன்றவை கிடைப்பதாக கூறியுள்ளனர்.பொதுமக்கள் தற்போது 5ஜி யை தாண்டி செல்லும் காலத்தில் நாளுக்கு நாள் மார்க்கெட்டில் போட்டி நிலவிய வண்ணமாகதான் உள்ளது.