பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து; நொடிப் பொழுதில் கட்டடம் தரைமட்டம்!

0
193

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே நாட்டார்மங்களம் பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூர் உரிமத்தை பெற்ற இந்த ஆலையில் 78 அறைகளுடன் இயங்கி வருகிறது. அன்றாட பணியைப் போல நேற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

 

குறிப்பிட்ட ஒரு அறையில் ராமகுருநாதன் என்ற பணியாளர் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென உராய்வு ஏற்பட்டதால் வெடிவிபத்து ஏற்பட்டு அந்த அறை தரைமட்டமானது. இதில் அவர் பலத்த படுகாயமடைந்தார். இதையடுத்து அவருக்கு விருதுநகர் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இந்த வழக்கு குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு முன்பு சமீபத்தில் நெய்வேலி என்எல்சி பாய்லர் வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Previous article38 ஆயிரத்தை நெருங்கியது தங்க விலை !இன்றைய விலை நிலவரம்
Next articleமூச்சுத்திணறல் காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி