மும்பையில் கனமழை: கட்டிடங்கள் சரிந்து விபத்து!

0
192

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் 2 அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும்
15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள மால்வானி பகுதியில் நேற்று பெய்த கன மழையில் அங்குள்ள இரு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.இதனையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு இடிபாடுகளில் சிக்கியிருந்த 15 பேரை காயங்களுடன் மீட்டனர்.இதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனை அடுத்து தெற்கு மும்பையில் உள்ள ஃபோர்ட் பகுதியில் மாலை 4.43 மணி அளவில் 6 அடுக்கு கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்தது.இடிபாடுகளில் சிக்கிய இருவர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இங்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க 8 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது.இதனை அடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Previous articleஆடி வெள்ளியன்று நம் முன்னோர்களை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்?
Next articleஅபராத கட்டணத்தை உயர்த்தும் வங்கிகள்! மின்மம் டெப்பாசிட் இல்லையென்றால் இதுதான் முடிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here