ஏப்பம் அடிக்கடி வருகிறதா இதை செய்யுங்கள்!! இந்த ஒரு தண்ணீர் போதும் உடனே நிறுத்திவிடும்!!
ஏப்பம் என்பது உடல் ரீதியான ஒரு வெளிப்பாடாகும். மேலும் அடிக்கடி ஏப்பம் விடுவதால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுகிறது. ஏப்பம் பொதுவாக சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு ஏற்படுகிறது. இதில் சாப்பிட்ட பிறகு ஏப்பம் வந்தால் சாப்பாடு ஜீரணம் ஆகிறது என்பார்கள். மேலும் சாப்பிடுவதற்கு முன் வந்தால் பசி ஏப்பம் என்பார்கள். வழக்கமாக சாப்பிடும் போது காற்றை உள்ளே இருக்கிறோம். மேலும் சில சமயங்களில் அவசர அவசரமாக உண்கிறோம். பேசிக்கொண்டே உணவு உண்ணும் போது, காற்று நிறைந்த மதுபானங்களை குடிக்கும் போது, வெற்றிலை பாக்கு போடும்போது, காபி, டீ குடிக்கும் போது நம்மை செய்யாமல் அறியாமல் காற்றை விழுங்கி விடுகிறோம். இதனால் சிலருக்கு காற்று அதிகமாக உள்ளே செல்கிறது. அந்த காற்று இரைப்பையில் இருந்து வெளியேற போதே ஏப்பம் ஏற்படுகிறது என்கிறார்கள். அடிக்கடி ஏப்பம் வருபவர்கள் உண்ண வேண்டிய உணவுகள் கீரை வகைகள், பப்பாளி பழம் ஏலக்காய் உண்பதால் ஏப்பம் வருவது தடுக்கப்படுகிறது.
தேவைப்படும் பொருட்கள் ஏலக்காய்
தண்ணீர்
தேன்
செய்முறை
ஏலக்காயை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மேல் இருக்கும் தோலை நீக்கி விட்டு உள்ளே இருக்கும் விதையை 15 எடுத்துக் கொள்ள வேண்டும். விதைகளை அரைத்து பொடி செய்து அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். மேலும் அதனோடு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சாப்பிடுவதற்கு முன் காலை மாலை காலை இரவு குடித்துவிட்டு அரை மணி நேரம் கழித்து சாப்பிட வேண்டும். இதனைத் தொடர்ந்து குடித்து வந்தால் படிப்படியாக ஏப்ப பிரச்சினை குணமாகும். மேலும் ஏப்பத்தை முழுவதும் தவிர்க்க சாப்பாட்டில் சீரகம், மிளகு ஏலக்காய் போன்றவைகளை சேர்த்து சமைத்து உண்ண வேண்டும்.