பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!

Photo of author

By CineDesk

பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் சனி, ஞாயிறு தொடர்ந்து திங்கட்கிழமை  சுதந்திர தினம்  என  மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இருக்கும்  மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும்  படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது.

மேலும்  இயல்பாக பண்டிகை காலங்களில் தனியார் சொகுசு பேருந்துகள் சென்னையில் இருந்து கோவை, நெல்லை, மதுரை, திருச்சி, குமரி போன்ற பகுதிகளுக்கு செல்ல அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர்.தற்போது  3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பயணச்சீட்டின் விலையை உயர்த்தியுள்ளனர்.இதனால் சொந்த ஊர் செல்லும் பலரும் கட்டணத்தை நினைத்து வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னையிலிருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800வரை வங்கிய நிலையில் தற்போது 2,300ரூ வரை அதிகபட்சம் வாங்குகின்றனர்.கோவைக்கு வழக்கமாக 1000 ரூபாய் கட்டணம் வாங்கிய நிலையில் தற்போது 3000 வரை விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் இருந்து மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக 1400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3500 வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆன்லைன் இணையதளம் ஒன்றில் ஓசூரில் இருந்து கோவில்பட்டிக்கு 4000 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அரசு சார்பாகவும்  சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பஸ் கட்டணம் மூன்று மடங்கு உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.