தமிழகத்தில் பேருந்து பயண கட்டணம் உயர்வு?- அமைச்சர் முக்கிய தகவல்!

0
137

கொரோனா பரவல் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பேருந்துகள் இயக்க படாமல் இருந்தது. இந்த நிலையில் பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்பட்டு இருப்பது பேருந்து பயண கட்டணம் உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளதா? என மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முக்கியமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த போது போக்குவரத்து பல மாதங்களாக முடிந்த நிலையில், தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அரசு பேருந்து மற்றும் பொது போக்குவரத்து நேற்று முதல் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் மக்களுக்கு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, 50 சதவீத இருக்கைகளுடன் அனைத்து பேருந்துகளும் இயங்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டியில் ஒன்றில் கூறியதாவது , தமிழக அரசு சார்பில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே கட்டணமில்லா பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணக்கீடு செய்ய புதிதாக அவர்களுக்கு பயணச்சீட்டு வழங்கியுள்ளது. இலவச பேருந்துகளுக்கு தனி வண்ணம் பூச ஆலோசிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று, மக்கள் மனதில் பாலை வார்த்து உள்ளது அரசு. அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் மற்றும் அதன் விளக்க உரை இடம் பெற்று இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்த ராசிக்கு உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது- 30-06-2021 Today Rasi Palan 30-06-2021
Next articleவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்! பயனர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!