கர்நாடக மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு வரும் 21ம் தேதி முதல் பேருந்து சேவை இயக்கப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பேருந்து, ரயில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசும் மாநில அரசும் ஊரடங்கில் அவ்வபோது தளர்வுகள் அறிவித்து வந்தது.
இதைத்தொடர்ந்து 4ஆம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவித்த போது பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்தவகையில், வரும் 21ம் தேதி முதல் கர்நாடகத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு பேருந்து சேவை இயக்கப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திரம் மற்றும் கோவாவிற்கு ஏற்கனவே பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநிலத்திற்கும் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, மங்களூரு, தாவங்கரே பகுதிகளிலிருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.