மீண்டும் பேருந்துகள் இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Photo of author

By Anand

மீண்டும் பேருந்துகள் இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Anand

Bus Service Will Start-News4 Tamil Online Tamil News

மீண்டும் பேருந்துகள் இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகள் மற்றும் தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தும் அடங்கும்.

மே 17 ஆம் தேதி முதல் ஊரடங்கு முடிவடையும் நிலையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலுள்ள பசுமை மண்டலங்களில் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பத்மநாப் பெஹெரா இன்று தெரிவித்தார். ஆனால் பேருந்து சேவைக்கான கட்டணங்கள் வழக்கத்தை விட இரு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பேருந்துகளை இயக்குவதற்கும், அதற்கான கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்தியதற்கும் போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய ஆலோசனைக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார் என்று பெஹெரா தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு ஊரடங்கு நேரத்தில் இயக்கப்படும் இந்த பேருந்துகள் சமூக இடைவெளியை பின்பற்றி 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றுவதால் பயணிகளிடமிருந்து சாதாரண கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் என்று அதற்கான காரணத்தையும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டண உயர்வானது பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் என்று கூறப்படுகிறது. மேலும் பேருந்து உரிமையாளர்களுக்கு இந்த திட்டம் குறித்து அறிவித்து அவர்களின் கருத்துக்களையும் பெற்று இது குறித்து ஓரிரு நாட்களில் முடிவெடுப்போம் என்றும் அமைச்சர் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கடைபிடிக்கப்படும் ஊரடங்கின் போது அலுவலகத்திற்குச் செல்வோருக்கு உதவும் வகையில், நாளை முதல் கட்டாக் மற்றும் புவனேஸ்வர் இடையே பேருந்து சேவையை தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு புவனேஸ்வர் மற்றும் கட்டாக் இடையே பேருந்தை இயக்க பேருந்து கட்டணத்தை ரூபாய் 30 ஆக ஒடிசா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் நிர்ணயித்துள்ளது. மேலும் இது அலுவலக நேரங்களில் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.