பேருந்துகள் ஓடாது ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு!! மக்கள் கொந்தளிப்பு!!
அன்றாடம் வேலை முடித்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணத்தை வைத்திருப்பவர்கள் ஆட்டோ மற்றும் டாக்சிகளிலும் அவர்களின் வசதிக்கேற்ப செல்கிறார்கள்.
சென்னையை பொறுத்த வரையில் அரசு போக்குவரத்து கழகம் திறம்பட செயல்படுகிறது. போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுனர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அனைத்து வழித்தடங்களிலும் இயங்கிய பேருந்துகளை நிறுத்தினர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாக்கினர்.
கூட்ட நெரிசல்களில், இடர்பாடுகளில் உரிய நேரத்தில் வீட்டிற்கு செல்ல முடியாமல் நெரிசலில் மக்கள் சிக்கி தவித்தனர். நேரம் செல்ல செல்ல பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்தது . பேருந்துகள் எப்போது இயங்கும் என்று உறுதியாக தெரியாததால் பணம் உள்ளவர்கள் ஆட்டோவிலும், மற்றும் டாக்சிகளில் சென்றனர்.
பேருந்து இயங்காத நேரத்தில் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் வழக்கமான கட்டணத்தை விட சற்று அதிகமாகவே வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மேலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினர். ஒருபக்கம் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி பொதுமக்களை தவிக்க விட்ட நிலையில் இதுதான் நமக்கு கிடைத்த ‘வாய்ப்பு என ஆட்டோ டிரைவர்களும், டாக்சி டிரைவர்களும், இப்படி கட்டணத்தை உயர்த்துவது கொடுமை என கோவத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளின் கட்டணமானது விதிகளுக்குட்பட்டு பொதுமக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியது. 2 மணி நேரம் நீடித்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக பேருந்துகள் இயக்கத் தொடங்கின.