கர்நாடக எல்லையில் நிறுத்தப்படும் பேருந்துகள்!!! பெங்களூர் பந்த் காரணமாக பயணிகள் அவதி!!!

Photo of author

By Sakthi

கர்நாடக எல்லையில் நிறுத்தப்படும் பேருந்துகள்!!! பெங்களூர் பந்த் காரணமாக பயணிகள் அவதி!!!

தமிழகத்திற்கு காவிரி நீர் தரக்கூடாது என்பதற்காக இன்று(செப்டம்பர்26) கர்நாடக மாநிலம் பெங்களூரில் முழு கடையடைப்பு நடந்து வரும் நிலையில் பெங்களூரு செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

கர்நாடக மாநிலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க வேண்டும் என்பதும் குறித்தும் தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல கர்நாடக காவிரி நீரினை தமிழகத்திற்கு தரக்கூடாது என்பதை வலியுறித்தி கர்நாடக மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று(செப்டம்பர்26) முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகின்றது.

இதையடுத்து இந்த கடையடைப்பு காரணமாக தமிழகத்தில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் தமிழக பேருந்துகள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடையடைப்பு நடந்து வரும் நிலையில் தமிழக பேருந்துகள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று கருதப்பட்ட நிலையில் நேற்று(செப்டம்பர்25) மாலை பெங்களூரு செல்லும் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று(செப்டம்பர்26) பெங்களூரு செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. அதே போலீஸ் தமிழகம் வரும் பெங்களூரு பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்டத்தில் இருந்து பெங்களூரு செல்லும் 350 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்தில் இருந்து 80 பேருந்துகளும் என்று மொத்தமாக 430 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.