திடீரென பற்றிய தீயால் 3 பேருந்து எரிந்து நாசம்…! சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்

Photo of author

By Parthipan K

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மூன்று பேருந்துகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின

சென்னை கோயம்பேடு தனியார் ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து தமிழகம் ,ஆந்திரா ,கேரளா ,கர்நாடகா போன்ற பிறமாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் முழு ஊரடங்கை  முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் பல மாதமாக போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.மேலும் அப்பகுதி முழுவதும் கரும்பு புகையாய க காட்சியளித்தன.ஆம்னி உரிமையாளர்கள் தரப்பில் தீயணைப்புத் துறையினருக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் நான்கு இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் தீயினால் மூன்று பேருந்துகள் முற்றிலுமாக எறிந்தனர். இதில் எரியக்கூடிய பொருட்கள் பேருந்தில் இல்லை .ஆனால் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களிருந்து எப்படி தீ பற்றியது என்பதனை விசாரிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.