Tvk Bussy Anand: தவெக முதல் மாநாடு, தவெக இரண்டாம் ஆண்டு விழா மற்றும் தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பரபரப்பாகவே அரசியல் பேசினார். குறிப்பாக திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் நோக்கமாக இருக்கிறது. அதேநேரம், விஜய் இன்னும் களத்தில் இறங்காமல் அரசியல் செய்து வருகிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது.
ஒருபக்கம், விஜய் வலது கையாக செயல்பட்டு வருபவர் புஸ்ஸி ஆனந்த். இவர் புதுச்சேரியை சேர்ந்தவர். புஸ்ஸி என்கிற தொகுதியில் வெற்றி பெற்றதால் அவருக்கு பெயர். அதன்பின் விஜயின் ரசிகர் மன்ற தலைவராக இருந்தார். இப்போது விஜய்க்கு ஆல் இன் ஆலாக மாறிவிட்டார். விஜயை யார் சந்திக்க வேண்டும்? யாருக்கு அனுமதி என்பதை கூட அவர்தான் முடிவு செய்கிறார். அதேநேரம், செய்தியாளர்கள் இவரிடம் எதாவது கேட்டால் ‘எல்லாம் தலைவர் சொல்லுவார்’ என சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்.
இந்நிலையில், சமீபத்தில் பாராளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு மசோதாவுக்கு எதிராக இன்று தமிழகமெங்கும் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், சென்னையில் நடந்த போராட்டத்தில் புஸ்ஸி ஆனந்தும் கலந்துகொண்டார். அப்போது ‘இந்த மசோதாவில் நீங்கள் எதிர்க்கும் விஷயம் என்ன?. ஒன்று சொல்லுங்கள்’ என கேட்க புஸ்ஸி ஆனந்தோ ‘இது முஸ்லீம்களுக்கு எதிரான சட்டம். அவர்களின் சொத்துக்களை பாஜக அரசு பிடுங்க நினைக்கிறது’ என சமாளித்தார்.
அப்போதும் விடாத ஒரு பத்திரிக்கையாளர் ‘ஒரு நல்ல காரணம் சொல்லுங்க’ என கேட்க அதற்கும் ‘அவங்க எல்லாத்தையும் வேலிட் காரணத்தோடதான் செய்யுறாங்களா?.. இஸ்லாமியர்களுக்கு தலைவரும், தவெகவும் எப்போதும் துணை நிற்கும்’ என பேசி அங்கிருந்து எஸ்கேப் ஆனார். இதைத்தொடர்ந்து, அவரை நெட்டிசன்கள் வீடியோ மிம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
கேள்வியவே பதிலாக கொடுப்பான்டா வர்க்கீசு ! pic.twitter.com/fLSeJa5SaJ
— Duraimurugan (@Saattaidurai) April 4, 2025