விவாகரத்து ஆனா என்ன?? திருமண ஆடையை வேற லெவலில் மாற்றிய சமந்தா.. வைரலாகும் புகைப்படங்கள்!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
அதன்படி 2021ஆம் ஆண்டு இந்த ஜோடி அவர்களின் விவாகரத்தை அறிவித்தது. விவாகரத்திற்கு பின்னர் சமந்தா பல பிரச்சனைகளை சந்தித்து விட்டார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது தான் அதன் பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளார். மீண்டும் நடிக்கவும் தொடங்கியுள்ளார்.
அதேபோல நாக சைதன்யா அவரின் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் நடிகை சோபிதாவுடன் டேட்டிங் சென்று வருவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்நிலையில், சமந்தா செய்துள்ள சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது.
அதன்படி, அவரின் திருமணத்திற்கு ஆசை ஆசையாக வாங்கிய வெள்ளை நிற கவுனை தற்போது மறு உருவாக்கம் செய்து அணிந்துள்ளார். வெள்ளை நிற கவுனை அடையாளமே தெரியாத அளவிற்கு கருப்பு நிறத்தில் மறு உருவாக்கம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள சமந்தா, “எனக்கு பிடித்த இந்த கவுனை மறு வடிவமைப்பு செய்து பயன்படுத்தினேன். அதை மீண்டும் அழகாக்கிய கிருஷ் பஜாஜுக்கு நன்றி. பழைய ஆடைகளை மறு வடிவமைப்பு செய்வது மிகவும் நிலையான வாழ்க்கை முறையை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும்” என குறிப்பிட்டுள்ளார்.