வாங்க வாங்க வந்து வாங்கிட்டு போங்க!! அஞ்சு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை மட்டுமே?
சேலம் மாவட்டம் வாழப்பாடி கிராமங்களில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு அழிஞ்சி குச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆடி மாத திருவிழா என்றாலே முதலில் ஞாபகம் வருவது தேங்காய் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து மகிழ்ச்சியில் இவ்விழாவை கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.
ஆடி மாதம் வந்தாலே புதுமண தம்பதியரை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்து வைத்து உபசரிப்பதே இவ்விழாவின் முக்கிய அம்சமாகும். ஆடி மாதத்தில் முக்கியமாக தேங்காய் சுடுவது அம்மாதத்தில் மக்களுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து தேங்காயில் அவல்,வெள்ளம், எல்,ஏலக்காய்,பாசிப்பயிறு, பச்சரிசி,ஆகியவற்றை தேங்காயில் துளையிட்டு நிரப்பிய பிறகு பாரம்பரிய முறைப்படி விறகில் நெருப்பு மூட்டி தேங்காயை சுடுவார்கள். சுட்ட தேங்காய் வெந்தவுடன் அதில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீர் சீறிப் பாயும் மேலும் அதனுடைய மனம் மனதைக் கவரும்.
பிறகு சுட்ட தேங்காயை சுவாமிக்கு படையல் செய்து விட்டு குடும்பத்தோடு உண்டு மகிழ்வார்கள். அதன்படி நாளைய தினம் ஆடி பண்டிகை என்பதால் தேங்காய் சுடுவதற்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் பூசப்பட்ட அழிஞ்சு குச்சிகள் வாழப்பாடியில் கோலாகலமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு அழிஞ்சு குச்சி ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அழிஞ்சி குச்சியை மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.இதனால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர் .