ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆவணியில் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.அன்றைய நாள் இந்து மக்கள் பிள்ளையார் சிலைக்கு பூஜை செய்து சிறப்பாக கொண்டாடுகின்றனர்.அதிலும் களிமண் மற்றும் அரச இலைகளால் செய்யப்பட்ட விநாயகரை அலங்கரித்து வீடுகளில் பூஜை செய்வது வழக்கம்.
விநாயகர் சிலைக்கு பூஜை செய்யும் போது அவரின் திருப்புகழை பாடல்களாக பாடி நாள் முழுவதும் கொண்டாடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.விநாயகர் தோன்றிய நாளில் நம் வீட்டிற்கு எந்த பிள்ளையார் சிலையை அழைத்து வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
விக்னங்களை தீர்க்கும் விநாயகர்,சங்கடங்களை போக்கும் விநாயகர்,உலகின் மூத்த கடவுள் விநாயகர் என்று அன்போடு அழைக்கப்படும் விநாயகரை எந்த பொருளில் பிடித்து சிலை செய்து வணங்கினாலும் முழுமையாக அருள் புரிவார்.
களிமண் விநாயகர்
நோய் நொடியின்றி வாழ களிமண்ணில் செய்யப்பட்ட விநாயகரை அழைத்து வழிபடலாம்.அதேபோல் பசுஞ்சாணத்தில் பிடிக்கப்பட்ட பிள்ளையாரை வணங்கினால் அனைத்து நன்மைகள் கிடைக்கும்.
விபூதி விநாயகர்
உடலில் ஏற்படும் உஷ்ண நோய்கள் குணமாக விபூதி விநாயகரை அழைத்து வழிபடலாம்.
குங்கும விநாயகர்
ஜாதகப்படி உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் குங்கும விநாயகரை அழைத்து வழிபட வேண்டும்.
சந்தன விநாயகர்
குழந்தைப் பேறு உண்டாக சந்தனத்தில் பிடிக்கப்பட்ட விநாயகரை அழைத்து வழிபடலாம்.
உப்பு விநாயகர்
எதிரிகள் தொல்லை நீங்க உப்பில் பிடிக்கப்பட்ட விநாயகரை அழைத்து வழிபடலாம்.
மஞ்சள் விநாயகர்
வீட்டில் சந்தோசம் நிலைக்க மஞ்சளில் விநாயகர் பிடித்து வணங்கலாம்.
வெள்ளெருக்கு விநாயகர்
பில்லி,சூனியம்,கண் திருஷ்டி ஒழிய வெள்ளெருக்கு விநாயகரை அழைத்து வழிபடலாம்.
வெல்ல விநாயகர்
உடலில் நோயின்றி வாழ வெல்ல விநாயகரை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து வழிபடலாம்.
வாழைப்பழ விநாயகர்
கணவன்-மனைவி உறவு மேம்பட,சண்டை சச்சரவு நீங்க வாழைப்பழ விநாயகரை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்யலாம்.