சமூக வலைத்தளங்களில் பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும் – சைபர்கிரைம் போலீசார் அறிவுரை!

சமூக வலைத்தளங்களில் பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும் – சைபர்கிரைம் போலீசார் அறிவுரை!

புதுச்சேரியில் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பழைய மற்றும் புதிய பொருட்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் வாங்க வேண்டுமென சைபர்கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதில் பழைய புதிய பொருட்களை வாங்க, விற்க உதவும் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களான OLX, Facebook, Instagram, Second Hand Mall, Koove, ListUp, Tradly, Quikr, Zefo, MaxDeal, EBay Spoyl, Tips To Sell Used Things Online போன்றவற்றில் இணைய வழி மோசடிக்காரர்கள் தங்களை ராணுவ வீரர்கள், CRPF அல்லது மத்திய அரசில் பணிபுரிகின்றேன், தற்போது எனக்கு மாறுதல் வந்து விட்டதால் நான் அடுத்த வாரம் டெல்லி செல்ல வேண்டும்.

மேற்கண்ட பொருட்களை விற்க இருக்கின்றேன் என்று புகைப்படங்களுடன் கூடிய விளம்பரங்களை குறிப்பிட்டுள்ள செயலீகளில் (APP) நிறைய வருகிறது. அவர்களை தொடர்பு கொண்டால் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருளை 90 ஆயிரத்திற்கு உங்களுக்கு கொடுக்கின்றேன், எங்களால் இந்த பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது என்று அவர்கள் தெரிவித்தவுடன் சிறிது பேரம் பேசி அவர்கள் கொடுக்கின்ற வங்கி கணக்குகளில் (UPI ID) நாம் அட்வான்ஸ் தொகையாக 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் பணத்தை செலுத்திய உடன் அவர்களுடைய இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்.

இது போன்ற குறைந்த விலைகளில் பொருள் கிடைக்கிறது என்று பொதுமக்கள் யாரும் பணத்தை மோசடி நபர்களிடம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுபோன்று 14 புகார்கள் பதிவாகியுள்ளது ஆகவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் என புதுச்சேரி இணை வழி குற்றப்பிரிவு காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.