விரைவில் நடைபெறும் உட்கட்சித் தேர்தல்! அதிமுகவில் இணைக்கப்படுகிறாராசசிகலா?

Photo of author

By Sakthi

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார்கள் என பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அதிமுகவின் இடையே மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது.

அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளலாமா? அல்லது வேண்டாமா? என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிமுக உட்கட்சி தேர்தல் மிக விரைவில் நடத்தப்படும் என தகவல் கிடைத்திருக்கிறது.

முதலில் அதிமுகவின் கிளைக் கழக தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது, அதன் பின்னர் ஒன்றிய கழகம் பேரூராட்சி மற்றும் நகராட்சி கழகத் தேர்தல் அதோடு மாவட்ட அளவிலான பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. கடைசியாக தலைமை கழக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

அதிமுகவின் கட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படும் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

முதலில் உட்கட்சித் தேர்தல் அதன் பின்னர் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் என்று அதிமுகவில் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. செயற்குழு மற்றும் பொதுக்குழு தேர்தல் அடுத்த மாதம் கடைசியில் நடைபெறலாம் என்று தெரிகிறது. உட்கட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இந்த மாதம் 10ஆம் தேதிக்கு பின்னர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.