கேரளாவில் உள்ள திருச்சூர் சேர்ந்த நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக வெற்றிமாறனின் அசுரன் படத்தில் அறிமுகமானார். இதற்கு முன் மலையாளத்தில் பல படங்களில் நடித்த வெற்றி கண்டவர் நடிகை மஞ்சு வாரியார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சிறந்த குச்சிப்பிடி நடன கலைஞரும் ஆவார்.
திரைப்படங்களைத் தவிர, இவர் கல்யாண் ஜூவல்லர்ஸ் , சோனி இந்தியா , லசாகு கோச்சிங் ஆப், மைஜி , உஜாலா டிடர்ஜென்ட், கிச்சன் ட்ரெஷர்ஸ், அஜினோர ஆகியவற்றின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார்.
மஞ்சு, திலீபுடனான திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியிருந்தார், 24 அக்டோபர் 2012 அன்று, குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயிலில் உள்ள நவராத்திரி நிருத்த மண்டபத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் குச்சிப்புடி நடனம் ஆட மஞ்சு மீண்டும் மேடைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது :-
வீட்டின் உள்ளே அடைந்து கிடப்பதால் எதையும் சாதித்து விட முடியாது என்றும் பயணங்கள் செய்வதால் மட்டுமே நாம் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர், வறுமையிலும் தங்களுடைய வாழ்வை கொண்டாடக்கூடிய மக்களை பார்த்தபொழுது மிகவும் ஆச்சரியப்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு பயணம் செய்யும்பொழுதும் பல விஷயங்களை தெரிந்து கொள்ளும் பொழுதும் நான் என்ற அடையாளம் தொலைந்து போவதாகவும் அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரிதளவும் கவனத்தை ஈர்த்து வருகிறது.