பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பொறுப்பேற்றுக்கொண்ட மே மாதம் ஏழாம் தேதி நடந்தது. அந்த சமயத்தில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், முக்கியத்துவம் கொடுத்து விவாதம் செய்யப்பட்டது.
தற்சமயம் நோய் தொற்று வராமல் குறைந்து வருகின்ற சூழலில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் கூடுவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் மக்கள் நலத் திட்டங்களுக்காக துறை ரீதியாக அறிவிக்கப்பட இருக்கின்ற புதிய திட்டங்கள் அதற்கான செலவுகள் உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. அதன்படி தமிழக அமைச்சரவை கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டியிருக்கிறார். நாளைய தினம் காலை 10 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
வேளாண் நிதிநிலை அறிக்கை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும், தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இந்த கூட்டத்தில் ஒப்புதல் வாங்க படலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.