தற்கொலை செய்து கொண்ட கஃபே காபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு
கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளரும், கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எஸ்.என்.கிருஷ்ணாவின் மருமகனுமான, வி.ஜி.சித்தார்த்தா மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றில் குதித்து நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து நடந்த தேடுதலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருகனும் கஃபே காபி டே நிறுவனருமான வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்தது உறுதியானது.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவரது மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் இந்தியா முழுவதும் கிளைகள் கொண்டுள்ள கஃபே காபி டே உட்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தார். இவர் கஃபே காபி டே நிறுவனம் மட்டுமல்லாமல் மேலும் சில நிறுவனங்களை சித்தார்த்தா நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு வாக்கிங் செல்வதற்காக நேத்ராவதி ஆற்றங்கரைக்கு சென்ற சித்தார்த்தா பாலத்தின் மேல் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். இதுகுறித்து வி.ஜி.சித்தார்த்தாவின் கார் ஓட்டுநர் அளித்த தகவலின் படி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், ஆற்றில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வி.ஜி.சித்தார்த்தா கஃபே காபி டே நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. அதில், ‘என் 37 ஆண்டு கடின உழைப்புக்குப் பின்னால் எந்த லாபகரமான தொழில்முறையைக் கையாள முடியவில்லை. நான் இதுவரை 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கினேன். ஆனாலும் லாபகரமான தொழிலை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் உங்களைக் கைவிடுகிறேன்.பங்குகள் தொடர்பான விவகாரத்தால் நமது நிறுவனத்தின் தொழில் சார்ந்த பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை நிறுத்தி வைத்தது. இதனால் எனக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட தவறுகள் மற்றும் கடன்களுக்கு நான் மட்டுமே காரணம். இதில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது குடும்பத்திற்கும் இது தெரியாது. என் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுங்கள். மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர். என்னை புரிந்துகொண்டு வருங்காலத்தில் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் காவல் துறையினரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் நேத்ராவதி ஆற்றிலிருந்து சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டிற்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.