தொலைந்து போன உங்கள் மொபைலில் உள்ள UPI ஐடியை பிளாக் செய்ய இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

Photo of author

By Divya

தொலைந்து போன உங்கள் மொபைலில் உள்ள UPI ஐடியை பிளாக் செய்ய இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

நம் நாடு தற்பொழுது டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வதில் தினந்தோறும் உச்சம் தொட்டு வருகிறது.காகித ரூபாய் தாள்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து அனைத்து இடங்களிலும் கூகுள் பே,போன்பே,பேடிஎம் போன்ற UPI செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(NPCI) படி UPI பயனர்கள் ஒரு நாளில் ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்த முடியும்.இவ்வாறு மொபைல் மூலம் அனைத்து விஷயங்களுக்கும் பணப் பரிமாற்றம் செய்யப்படும் நிலையில் உங்கள் மொபைல் தொலைந்து விட்டால் அதில் இருக்கும் UPI மூலம் பணம் திருடப்பட்ட அதிக வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு ஒரு சூழிநிலை தங்களுக்கு ஏற்படும் பொழுது தங்கள் மொபைலின் UPI ஐடியை உடனடியாக பிளாக் செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

UPI ஐடியை பிளாக் செய்வது எப்படி?

நம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கிய UPI செயலிகளாக கூகுள் பே,போன் பே மற்றும் பேடிஎம் உள்ளது.இந்த மூன்று செயலிகள் பயன்படுத்தி வரும் பயனர்கள் தங்கள் மொபைல் தொலைந்து விட்டால் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி அதை பிளாக் செய்யலாம்.

கூகுள் பே

நீங்கள் கூகுள் பே செயலி பயன்படுத்துபவராக இருந்தால் 18004190157 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களது யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம்.

போன் பே

நீங்கள் போன் பே செயலி பயன்படுத்துபவராக இருந்தால் 02268727374 அல்லது 08068727374 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களது யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம்.

பேடிஎம்

நீங்கள் பேடிஎம் செயலி பயன்படுத்துபவராக இருந்தால் 01204456456 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களது யுபிஐ ஐடியை பிளாக் செய்யலாம்.