காவலர்கள் உடையில் நவீன கேமிரா; 4G தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு துவக்கம்!

0
170

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த உடல் இணை கேமிராக்கள் மூலமாக சட்டத்தை மீறும் வாகன ஓட்டிகள், தவறு செய்யவில்லை என வாக்குவாதம் செய்வதும் கண்காணிக்கப்படும்
என்றும் டிராபிக்கில் தவறாக சென்று முறையற்று பேசுவதும் பதிவு செய்யப்படும்.

இந்த நவீன கேமிராவில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சாலை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்வதில் வெளிப்படைத் தன்மையும், நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படும். தற்போது கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு இந்த கேமிரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமிரா 2 எம்.பி திறன்கொண்தான் ஒலி மற்றும் ஒளி ஆகியவை பதிவு செய்யலாம். அதாவது பேசுவது மற்றும் காட்சிகளை பதிவு செய்ய முடியும்.

https://twitter.com/Sumitips/status/1279617958713585665?s=20

இதில் தேதி, நேரம் போன்றவை தானாகவே பதிவாகும் தன்மை கொண்டது. மேலும் கேமராவில் பொருத்தியுள்ள 4ஜி இணைப்பு மூலம் நிழற்பட பதிவுகளை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு செய்யலாம். போக்குவரத்து அதிகாரிகள் எங்கு வழக்கு பதிவு செய்கிறார்கள் என்பதை ஜி.பி.எஸ் கருவி மூலம் நேரலையில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஎம்.சி.ஏ படிப்பு 2 ஆண்டாக குறைப்பு; ஏ.ஐ.சி.டி.இ அறிவிப்பு!
Next articleமூன்றாவது இடத்தில் இந்தியா.!:அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் தொற்று எண்ணிக்கை உயர்வு