TVK DMK: தமிழ்நாட்டில் தற்பொழுது தான் அரசியல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. புதிய கட்சியாக தவெக, பிரத்தியேக கட்சிகளுடன் போட்டி போடுவது குறித்து தான் தினசரி பேச்சு அடிபட்டு வருகிறது. விஜய் கட்சி தொடங்கி மாநாடு நடத்தியது வரை மக்கள் பெரும்பாலும் நல் ஆதரவையே தெரிவித்து வருகின்றனர். அதேபோல தனது எதிரி திமுக பாஜக தான் எனக் நேரடியாக கூறியதோடு, அவர்களின் கூட்டணி கட்சிக்குள்ளேயே விரிசல் ஏற்படுத்தும் வகையில் புதிய தீர்மானங்கள் பலவற்றை கொண்டு வந்துள்ளார்.
இதெல்லாம் ஆளும் கட்சிக்கு பெரும் தலைவலியாக தான் உள்ளது. இப்படி இருக்கையில் சில தினங்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடியவர்களை காண்பதற்கு அனுமதி கேட்டது முதல் திடல் அமைக்கும் வரை அனைத்தையும் காவல்துறை ரத்து செய்து வந்தது. இதற்கு மறைமுக ஆதரவு திமுக தான் என அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வாறு இருக்கையில் இறுதி கட்டத்தில் தான் தவெக தலைவருக்கு பரந்தூர் போராட்டக்காரர்களை காண அனுமதி கிடைத்தது.
அதிலும் திடலுக்கு என எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை.இவ்வாறு இருக்க இரு கட்சியினரும் எதிர்ரெதிர் கருத்துக்களை கூறி வருகின்றனர். இதில் திமுக கூட்டணி கட்சிகள் தொடர் அழுத்தம் கொடுத்து வருவதற்கு விஜய் தான் காரணம் என கட்சி தலைமை நினைக்கிறது. இதனால் அவரை மறைமுகமாக சாடியே வருகின்றனர். அந்த வகையில் விஜய் மற்றும் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் சூசனமாக பேசியுள்ளார்.
அதில், இங்கு கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள்?? குறிப்பாக நாங்கள் தான் அடுத்த ஆட்சி” அடுத்த முதல்வர்” என்று அனாதை நிலையில் சுற்றுபவர்களெல்லாம் தற்போது பெருமை பேசுகிறார்கள். திமுக-வானது 1949 ஆம் ஆண்டு ஆரம்பித்து 1957 ஆவது ஆண்டு தான் தேர்தலிலேயே போட்டியிட வந்தது. ஆனால் இன்று நிலை அப்படி இல்லை. நான் இப்பொழுது கூறுவது எந்த கட்சி?? அதன் தலைவர் யார் என கூற விரும்பவில்லை. உண்மையில் உழைத்து, தமிழனுக்காக பாடுபட்ட கட்சியாக இருந்தால் பெயர் சொல்லலாம்.
வேஷமிட்டு நாடகம் நடத்திக் கொண்டிருக்க கூடியவர்களின் பெயர் சொல்லி மேடையின் மதிப்பை குறைக்க விரும்பவில்லை என கூறியுள்ளார். இவர் இவ்வாறு பேசியது புதிதாக கட்சி ஆரம்பித்து வளர்ந்து வரும் விஜய் மற்றும் பிராபாகரனை சீமான் நேரடியாக சந்தித்ததில்லை என கூறுவதால் அவருக்கும் இவர் பேசியது பொருந்தும் படியாக உள்ளது. ஸ்டாலின் பேசியதற்கு தற்பொழுது வரை இரு தரப்பிலிருந்தும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.