சிஎஸ்கே  அணியில் இடம் வேண்டும் கிடைக்குமா?? யோகிபாபுவின் கேள்விக்கு தோனி கூறிய பதில்!!

0
157
Can I get a place in the CSK team?? Dhoni's answer to Yogi Babu's question!!
Can I get a place in the CSK team?? Dhoni's answer to Yogi Babu's question!!

சிஎஸ்கே  அணியில் இடம் வேண்டும் கிடைக்குமா?? யோகிபாபுவின் கேள்விக்கு தோனி கூறிய பதில்!!

கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் கூல் கேப்டன் தோனி பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை தனது மனைவியுடன் சேர்ந்து தொடங்கி உள்ளார். தற்போது அவரது நிறுவனம் லெட்ஸ் கேட் மேரிட் என்ற படத்தினை தயாரித்து உள்ளது.

படத்தின் இசை மற்றும்  ட்ரெய்லர் விழாவிற்கு சென்னை  வந்த படத்தின் தயாரிப்பாளரும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனுமான தோனி பேசியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸிற்கு விசிலடிங்க. டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம், அதிகபட்ச ஸ்கோரும் சென்னையில் தான்.

கடந்த 2008 -ஆம் ஆண்டு ஐபிஎல் விளையாட வந்தபோது சென்னை தன்னை தத்து எடுத்துக் கொண்டதாக கூறிய தோனி சென்னைக்கு எப்போதும் தனது மனதில் நீங்காத இடம் உள்ளது. அதனால் தான் எங்களது படத் தயாரிப்பு தமிழில் தொடங்கியுள்ளோம்.

எல்ஜிஎம் படம் மிகவும் குறைவான நாட்களில் எடுக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் கவனம் இருந்தாலும் அடிக்கடி தனது மனைவியிடம் படத்தைப் பற்றி விசாரித்து தெரிந்துக் கொண்டதாக கூறினார்.

அடுத்து தோனியிடம் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் தனக்கு இடம் கிடைக்குமா?? என யோகி பாபு எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய தோனி ராயுடு ஒய்வு பெற்று விட்டதால் சென்னை அணியில் உங்களுக்கு இடம் கட்டாயம் உண்டு எனவும், அதற்கு அணி நிர்வாகத்திடம் பேச தயார், ஆனால் அதற்கு தொடர் பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

 

Previous articleஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!!
Next articleரஜினியின் அறிவுரையை வேதவாக்காக எடுத்து கொண்ட விஜய் சேதுபதி!! இனி வில்லனாக திரைப்பயணம்!!