இனி 2000ரூபாய் நோட்டுககளை டெபாசிட் செய்ய முடியாதா!வங்கி கூறிய பதில்?
அனைத்து வங்கிகளிலும் கடந்த சில மாதங்களாக கேஷ் டெபாசிட் மிசின்களில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடிவதில்லை. மேலும் இது போன்ற குற்றச்சாட்டுகள் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை கேஸ் டெபாசிட் மெஷின்களிில் ஏற்றுக் கொள்வதில்லை எனவும் ,இதனால் டெபாசிட் செய்ய முடியாமல் மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்து கொண்டு இருக்கின்றனர்.
இதனால் வாடிக்கையாளர் அனைவரும் வங்கிகளை குற்றம் சாட்டி வருகின்றார்கள்.வாடிக்கையாளர்கள் கூறிய குற்றச் சாட்டுக்கு வங்கியில் உள்ள மேல் அதிகாரிகள் அனைவரும் அவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.
வங்கியில் உள்ள அதிகாரிகள் கூறியதாவது வங்கிகளில் தற்பொழுது அனைத்து ஏடிஎம் மிஷின்களிலும் மற்றும் நிறுவனங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர் .