“காதலால் தற்கொலை செய்வதால் காதலை தடை செய்ய முடியுமா?” ஆன்லைன் வகுப்பு குறித்து எச் ராஜா ஆவேசம்

0
142

காதல் தோல்வியின் மூலம் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்காக காதலை தடை செய்ய முடியுமா? அது போலவே ஆன்லைன் வகுப்புகளைத் தடை செய்ய முடியாது என எச். ராஜா தெரிவித்துள்ளார்.

 

பொது முடக்கத்தினால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன நிலையில், வீட்டிலிருந்தபடியே மாணவர்களுக்கான வகுப்புகளை ஆன்லைனில் செயலிகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

இது செல்போன் இல்லாத ஏழை மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள் மன உளைச்சலில் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். சமீபத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை அதற்கு உதாரணம் ஆகும்.

 

இந்த நிலையில் இந்த ஆன்லைன் வகுப்புகளை ஏழை மாணவர்களுக்காக ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும் அல்லது ஆல் ஆன்லைன் வகுப்புகளை தடைசெய்ய வேண்டுமென பெற்றோர்களும், செயல்பாட்டாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா ஆன்லைன் வகுப்பு குறித்து பேசிய அவர், “காதலால் கூட தற்கொலைகள் நடைபெறுகிறது. அதனால் காதலை தடை பண்ண கேட்க முடியுமா?

 

அது போலவே ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

 

மேலும், தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின்கீழ் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு அதிகமாக உள்ள கோயில்களின் சொத்துகள், வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும்.

 

மேலும், கோவில் காணிக்கைகள் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு கூறுகிறேன். அறநிலையத்துறையால் கோயில்களில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது.

 

கோயில்களை அழிக்கும் துறையாகவே இந்த அறநிலையத்துறை செயல்படுகிறது. இந்துக்களை இந்து அறநிலையத்துறை சோதிக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், “மத்திய பாஜக அரசு மீதான குற்றச்சாட்டு என்பது இடிந்து போன திராவிடத்தின் அழுகிய மூளையின் பேச்சாகத்தான் இதனைக் கருத வேண்டும்.

 

ரஜினி கட்சி தொடங்கியவுடன், பாஜகவுடன் கூட்டணி அமைப்பாரா என்பது பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ரஜினி ஆளுமையான ஆள் என்பதால், அவர் பாஜகவில் சேர்வது குறித்து நான் கருத்து கூற முடியாது.

 

மேலும், “பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இல்லை” அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், “பாஜகவின் கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. பாஜக டெல்லிக்கு ராஜா மட்டுமல்ல தமிழகத்திலும் ராஜா தான்” என்று கூறினார்.

Previous articleசேலம் ஆத்தூர் ஏரியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்!
Next articleரயில்வே துறையில் வேலை! மாத சம்பளம் 95,000 !